முக்கிய செய்திகள்

தொடரும் வடகிழக்கு பருவமழை : 24 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை…

தமிழகம்,புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை, ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக தமிழகம் மற்றும் கேரளாவின் இதர பகுதிகளுக்கு பரவி மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும், ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை அடுத்து வரும் 3 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.