சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்


மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவை காரணமாக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி மானியத்துடன் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் டெல்லியில் விலை ரூ.493.55 ஆக உயரும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி மற்றும் மானியமில்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கருத்தில்கொண்டு இந்த விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, மானிய மில்லாத சமையல் சிலிண்டர் விலையும் ரூ.55.50 உயரும்.

இந்த 55.50 ரூபாயில் இருந்து ரூ.2.71 காசுகள் கழித்தது போக மீதமுள்ள ரூ.52.79 காசுகள் மானியமாக மக்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். இதன்படி, ஜுலை மாதத்தில் இருந்து, வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் மானியத்தொகை ரூ.204.95 காசில் இருந்து, ரூ.257.74 காசுகளாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

துபாயில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்திய அணி சாம்பியன்..

ராகுலை வம்பில் மாட்டிவிடும் விஜய் மல்லையா: பாஜக எழுப்பும் பரபர சர்ச்சை!

Recent Posts