கூட்டுறவு வங்கியில் நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது: கூட்டுறவுத்துறை அறிவிப்பு..

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் 40 கிராம் அளவு தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது.
அதன்படி நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் தள்ளுபடி கிடையாது எனவும், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருந்தால் தள்ளுபடி செய்யப்படாது என கூறியுள்ளது.
கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்கள், ஆதார் எண்ணை தவறாக வழங்கியவர்கள், குடும்ப அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை வைத்திருப்போருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 48 லட்சம் நகைக்கடன்களில் 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது எனவும் கூறியுள்ளது

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்வு:முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை மையம்

Recent Posts