கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியீடு


கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்க தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு:

கூட்டுறவு தேர்தலின் 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.

தொடக்கச் சங்கங்கள், மத்திய சங்கங்கள், தலைமைச் சங்கங்கள் என மூன்றடுக்கு முறையை அனுசரித்து 18 ஆயிரத்து 775 கூட்டுறவுச் சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம் வகுத்தது.

முதல் அடுக்கில் வரும் 18 ஆயிரத்து 465 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களுக்கு முதற்கட்டத்தில் 12.3.2018 முதல் 07.5.2018 வரை 4 நிலைகளாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பின் அடிப்படையில் 4 நிலைகளிலும் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டின் மதுரை கிளையின் உத்தரவின்படி அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில், ஐகோர்ட்டின் இடைக்கால தடையை விலக்கி உத்தரவிடப்பட்டது.