சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்
வரும். 4-ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் 11-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா ஆய்வுப்பணிக்காக சிவகங்கைக்கு 4-ம் தேதி முதல்வர் செல்ல உள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓர் ஆண்டு நிறைவு பெறும் நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது