இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,496 ஆக உயர்வு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,496 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நேற்று 775 ஆக உயர்வடைந்து இருந்தது.

5,063 பேர் குணமடைந்தும், 18,668 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,506 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை இன்று 824 ஆக உயர்வடைந்து உள்ளது.

. 5,804 பேர் குணமடைந்தும், 19,868 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,506ல் இருந்து 26,496 ஆக உயர்வடைந்து உள்ளது.

நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 7,628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 22 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 301ல் இருந்து 323 ஆக உயர்ந்து உள்ளது. 1,076 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதேபோன்று தமிழகத்தில் 1,821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 960 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். 23 பேர் பலியாகி உள்ளனர்.

நமது அண்டை மாநிலங்களான கேரளாவில் 457 பேருக்கும், கர்நாடகாவில் 500 பேருக்கும், ஆந்திர பிரதேசத்தில் 1,061 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் 7 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது.