முக்கிய செய்திகள்

தமிழகத்தில் கரோனா தொற்றால் மேலும் 743 பேர் பாதிப்பு.

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,191 – ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கரோனாவில் இருந்து இதுவரை 5,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 987 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனாவால் . உயிரிழந்தோர் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மிகவும் நெருக்கமான மாநகரம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 8,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.