
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினம்,குடியரசு தினம்,காந்தி பிறந்தநாள்மற்றும் தொழிலாளர் தினத்தன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் அதிகமானதால் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது கரோனா 3-ஆம் அலையின் வீச்சு அதிகரித்திருப்பதால் வரும் ஜனவரி-26-ஆம் தேதி நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.