கரோனாவோடு சேர்ந்து கொந்தளிக்கும் வெயில் :’போதுமடாசாமி’ புலம்பும் பொதுமக்கள்

வெப்ப சலனத்தால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து குளிர்ச்சி நிலவியது. ஆனால் புயல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் நேற்று முதல் வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வட தமிழகத்தில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை கடந்தது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்த கத்திரி வெயில் வரும் 28-ம் தேதி நிறைவடைகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இனி வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதற்கு ஏற்றது போல நேற்றிலிருந்து தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்து 100 டிகிரியை தொண்டியுள்ளது.

அதன்படி இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வடதமிழகத்தில் வெப்பநிலை 100-103டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரோனா பயம் ஒருபக்கம் மக்களை அச்சுருத்தி வரும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலைக் கண்ட மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

புனித ரமலான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த தலைமை காஜி வேண்டுகோள்..

தமிழகத்தில் கரோனா தொற்றால் மேலும் 743 பேர் பாதிப்பு.

Recent Posts