தனியார் தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருன் கரோனாவால் உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு திமுக எம்.பி கனிமொழி தனது இரங்களை டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.
ஊடகத்துறையில் கடந்த 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த திரு.வேல்முருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் முன்களப் பணியாளர்களாக இருந்து வரும் ஊடக நண்பர்கள் மிகுந்த கவனத்தோடும், முன்னெச்சரிக்கையோடும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
என்று கனிமொழி எம்.பி பதிவிட்டுள்ளார்.