உலக அளவில் 13 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு: 70,000 பேர் உயிரிழப்பு…

உலகில் 208 நாடுகளை கொரோனா பாதித்துள்ள நிலையில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய 3 நாடுகளில்தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் கொரேனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்பு 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டியுள்ளது.

இதில் சுமார் 10 லட்சம் பேர் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களே ஆவர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளதை அடுத்து, சர்வதேச அளவில் 27வது இடத்தை இந்தியா எட்டியுள்ளது.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் சுமார் மூன்றரை லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில்தான் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டது.

அதிலும் எப்போதும் பரபரப்பாக இயங்கும் நியூயார்க் நகரில் மட்டும் 1,23,000 பேரை கொரோனா தாக்கியுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை நிகழ்ந்த உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட பாதி அளவு நியூயார்க்கில்தான் நடந்துள்ளது. அங்கு மட்டும் சுமார் 4,159 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்தபடியாக நியூஜெர்சி மாகாணத்தில் 37,505 பேரை கொரோனா தாக்கியது. 917 பேர் கொடூர பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இத்தாலியை ஸ்பெயின் மிஞ்சியுள்ளது. ஸ்பெயினில் சற்று முன்னர் வரை 13,055 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் 1,35,000 பேரை கொரோனா பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொத்துக்கொத்தாக மக்கள் மாண்டு வந்த நிலையில் இன்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

40 ஆயிரம் பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர்.உலகளவில் இத்தாலியில்தான் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதாவது 15 ஆயிரத்து 887 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினைப்போலவே தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை இத்தாலியில் தற்போது சற்று சரிந்துள்ளது.

இத்தாலியில் 21 ஆயிரத்து 815 பேர் கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.

ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் பாதிப்பு எண்ணிக்கையின் கூட்டுத் தொகையைவிட அமெரிக்காவில் மிக அதிகம் என்பதே அந்த நாட்டில் கொரோனாவின் தீவிரத்தை உணர்த்துகிறது.

இந்தியாவில் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியுமா…

கொரோனா தடுப்பூசி IN0 – 4800 இன்று சோதனை ..

Recent Posts