உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளில் பரவியுள்ளது. வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது.
இந்நிலையில், கரோனாவுக்கு வைரஸுக்கு உலகளவில் 2,407,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அந்த வைரஸால் 1,65,073 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் நிலையில் 6,25,199 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வல்லரசு நாடான அமெரிக்கா கரோனாவால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக கரோனா வைரஸால் 7,64,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. 40,565 பேர் பலியாகி உள்ளனர்.