கரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு..

கரோனா தொற்று மோசமானது அல்ல என்ற கண்ணோட் டத்தை மக்களிடையே ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலை வர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவர்கள் தினத்தையொட்டி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, டில்லியில் பணியாற்றும் இந்திய செவிலியர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி மூலம் நேற்று 30 நிமிடங்கள் உரையாடினார். பின்னர், அவர் கூறியதாவது: கரோனாவுக்கு எதிராக மக்களைப் பாதுகாக்க ஆயுதமின்றி போராடும் மருத்துவர்கள் அனைவரும் அகிம்சையின் ராணுவ வீரர்கள்.

இவர்களிடம் பேசிய போது, டெல்லி யில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், போதுமான அளவு பரிசோ தனை மேற்கொள்ளப்படவில்லை என்று டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர் விபின் கிருஷ்ண‍ன் தெரிவித்தார்.

ஒரு நோயாளிக்குக் கரோனா இருக் கிறதா? இல்லையா? என்பது கூட தெரி யாமல் எப்படி சிகிச்சை அளிப்பது? அல் லது அவரை எந்த வார்டில் அனுமதிப்பது? என்று கூட தெரியவில்லை என்று வேத னைப்பட்டனர். இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுவதாக அவர்களுக்கு உறுதி அளித்தேன். கரோனா ஒன்றும் நீங்கள் நினைப்பது போல், மோச மானது அல்ல என்ற கண்ணோட்டத்தை மக்கள் இடையே உருவாக்க அரசு முயற் சிக்கிறது.

கரோனாவுடன் போராடி தங்கள் உயி ரைத்தியாகம் செய்த, தென் இந்தியாவைச் சேர்ந்த இரு செவிலியர்களுக்கு டில்லி அரசு அறிவித்த ரூ.1 கோடி இழப்பீடு வழங்காதது கவலையளிக்கிறது. இழப்பைப் பணத்தால் ஈடுகட்ட முடியாது என்ற போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு அந்த பண உதவி ஆறுதலாக இருக் கும் என்பதால் டில்லி அரசு உதவ வேண் டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.