முக்கிய செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 1162 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று (ஜூன் 1) புதிய உச்சமாக ஒரே நாளில் 1,162 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 184 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் 50 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 23,495 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,377 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இன்று சென்னையில் 9 பேரும், திண்டுக்கல், புதுக்கோட்டையில் தலா ஒருவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்துஆனவர்கள் எண்ணிக்கை 13,170 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 10,138 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,322 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 19,961 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,212 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.