முக்கிய செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று புதிதாக 5,994 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 989 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்றைய (ஆக.9) கரோனா தொற்று நிலவரம் குறித்து தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள விவரம்:

”தமிழகத்தில் இன்று புதிதாக 5,994 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் 3,503 பேர். பெண்கள் 2,489 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 2 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண்கள் 1 லட்சத்து 79 ஆயிரத்து 247 பேர். பெண்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 625 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 14 ஆயிரத்து 605 பேர். 13-60 வயதுடையவர்கள் 2 லட்சத்து 44 ஆயிரத்து 934 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 37 ஆயிரத்து 362 பேர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 186. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 32 லட்சத்து 25 ஆயிரத்து 805.

இன்று மட்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 179. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 9,708.

தமிழகம் முழுவதும் இன்று 6,020 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 2 லட்சத்து 38 ஆயிரத்து 638 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 34 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 85 பேர் என 119 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,927 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் இணை நோய்கள் அல்லாதவர்கள் 16 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 103 பேர்.

இன்று கரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 989 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 11 ஆயிரத்து 654 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 9,117 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக, 95 ஆயிரத்து 161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 2,302 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது 53 ஆயிரத்து 336 பேர் (தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 61, தனியார் சார்பாக 68 என மொத்தம் 129 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன”.

இவ்வாறு தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.