திமுக மகளிர் அணிச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட் பக்கத்தில்,
கரோனா சூழலால் வருமானம் இன்றி மக்கள் சிக்கித்தவித்து வரும் நிலையில் டெண்டர்கள் தேவையா என கேள்வி யெழுப்பி யுள்ளார்
இது குறித்து தனது டிவிட் பக்கத்தில்
கரோனா சூழலால் வருமானம் இன்றி சிக்கித்தவித்து வரும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லாமல், பற்றாக்குறை எனக் கூறி வருகிறது அரசு.
ஆனால், தஞ்சை மற்றும் கோவையில் தலா ரூ.1000 கோடிக்கு மேல் இரண்டு டெண்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.
இந்த பெருந்தொற்று காலத்தில் உட்கட்டமைப்பு, புதிய திட்டங்கள் செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அந்த நிதியை மக்களின் நிவாரணத்திற்காகவும்,
அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்கும் அரசு பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்திலும் பணமே குறிக்கோளாக செயல்படக் கூடாது.
என பதிவிட்டுள்ளார்.