தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்வு..

தமிழகத்தில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 352 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் தொற்று பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 727 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது.

செப்.7 முதல் மெட்ரோ சேவை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..

சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தடை.: மலேசிய பிரதமர் அறிவிப்பு..

Recent Posts