இந்தியாவை தொற்றியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் நாட்டின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது. தொற்று நோயாகப் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில் தேசிய ஊரடங்கு உத்தரவு நாளை அமல்படுத்தப்படும் என நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் காணொளி காட்சி மூலம் தெரிவித்தார் பிரதமர் மோடி. வைரஸ் பாதிப்பு தீவிரம் அடையும் போது தொடர்சியாக ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவருவதற்கான முன்னோட்டம் இது என்பதே அவர் அறிவித்ததன் நோக்கமாக இருக்கிறது.
ஆனால், பா.ஜ.க ஆதரவாளர்களோ, மோடி எதை அறிவித்தாலும் அதுவே உலகின் தலைசிறந்த அறிவிப்பு என கருதி, பல போலி செய்திகளையும், வதந்திகளையும், புராணக் கட்டுகதைகளையும் திரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த வதந்தியை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு கட்சிகளும், சில கும்பல்களும் தொடர்சியாக செய்துவருகிறது.
அந்தவகையில் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு மூலம் கொரோனா அழியும் என்றும், கொரோனா வைரஸின் ஆயுட்கலாம் 12 மணிநேரம் என்பதால்,14 நேரம் மக்கள் வீட்டுக்குள் இருக்க சொல்லியிருக்கிறார் என்றும், இதனால் வைரஸின் சங்கிலித் தொடரை இல்லாமல் செய்ய முடியும் என்றும், மக்கள் வீட்டுக்குள் இருக்கும்போது ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து கொரோனா எதிர்ப்பு மருந்து தூவப்போகிறார்கள் என்றும் வதந்தியை பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளர். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 12 முதல் 14 மணி நேரம் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தினால் மூன்றாவது கட்டத்திற்கு செல்லாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பலர் ரஜினியின் இந்த பதிவை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், கொரோனாவின் ஆயுட்காலம் தொடர்பாக ரஜினி பேசிய அந்த வீடியோ ஆதரமற்றது என தெரிவித்து ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியுள்ளது.
இது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேலும், #FakenewsRajini என்ற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.
அதே போல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கொரோனா வைரஸ் குறித்து பதிவிட்டிருந்த வீடியோவையும் ட்விட்டர் நிறுவனம்