
கரோனா நிவாரணமாக குடும்ப அட்டை தாரார்களுக்கு 5 கிலோ கொண்டைக் கடலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தேவையான கொண்டைக் கடலை அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொகுப்பில் இருந்து ஜூலை முதல் 5 மாதங்களுக்கு தலா ஒரு கிலோ கொண்டைக் கடலை வழங்கப்படும் என கூறியுள்ளது.