மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும், லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1992-93ல் பீகார் முதலமைச்சராக இருந்த போது, மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக லாலு மீது 6 வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் 76 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதில் 14 பேர் விசாரணையின் போது மரணமடைந்தனர்.
3 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர். மீதமுள்ள 56 பேர் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.