முக்கிய செய்திகள்

கவுத்தமாலாவில் எரிமலை வெடிப்பு: 25 பேர் உயிரிழப்பு : பலர் காயம்…

கவுத்தமாலாவிலுள்ள ஃபியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் 25 பேர் பலியாகினர் 100க்கும் மேற்பட்டோர் பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “கவுத்தமாலாவில் தென் மேற்கே உள்ள ஃபியுகோ எரிமலை வெடித்து லாவா குழம்பு வெளியேறியது. இந்த லாவா குழம்பு எல் ரோடா கிராமம்வரை பரவியது. இதில் பல வீடுகள் தீப்பற்றிக் கொண்டன.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு- பிற்கபல் 2 மணிக்கு வெளியாகிறது
வயல்கள் போன்றவை தீயிக்கு இரையாயின. இதில் 25 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணி வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

எரிமலையால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்த பெண் ஒருவர் கூறும்போது, “எனது வீடு தீப்பற்றிக் கொண்டது அனைவராலும் தப்பிக்க முடியவில்லை. அவர்கள் மாட்டிக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். எங்களது சோள தோட்டம் முழுவதும் எரிந்துவிட்டது. நான் மலை பக்கமாக ஓடி தப்பித்தேன்” என்றார்.

இயல்பு நிலை திரும்ப அவசர கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கவுத்தமாலா அதிபர் மோரேல்ஸ் தெரிவித்துள்ளார்.