குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

குற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் அரசியலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

இது குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்த தேர்தல் ஆணையம், குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம் என கூறியது.

ஆனால் நாடாளுமன்றம் தான் இது குறித்து முடிவு  எடுக்க வேண்டுமே தவிர உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஒருவர் மீது பதியப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கும் வரை அவர் தேர்தலில் போட்டியிட நிபந்தனை விதிக்க முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது.