
கடலூரில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார்.
மேலும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
மழை வெள்ளத்தால் குறிஞ்சிப்பாடியில் 10,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்,வாழை, கரும்பு ஆகிய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனையடுத்து,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆடுர்அகரம், பரதம்பட்டு, பூவாணிக்குப்பம், ஆலப்பாக்கம் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.