முக்கிய செய்திகள்

ஊழல் அதிகாரிகளை “லபக்”க ஆதார் வலை ரெடி: சிவிசி மாஸ்டர் ப்ளான்

 

லஞ்ச, ஊழல் மூலம் முறைகேடான வகையில் சொத்துகளை வாங்கிக் குவிக்கும் உயர் அதிகாரிகளை ஆதார் மூலம் கண்டுபிடித்து கையில் விலங்கைப் போட, மாஸ்டர் பிளானுடன் தயாராகி வருகிறது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்.

வங்கிக் கணக்கு, அசையா சொத்துகளை வாங்குதல் போன்றவற்றுடன் ஆதார் இணைக்கப்படுவதன் மூலம், உயரதிகாரிகளின் நிதிப்பரிவர்த்தனைகளை எளிதில் கண்டுபிடித்து விட முடியும் என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

முக்கிய வழக்குகளில் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தகவல்களைப் பெற இயலாமல் தடுமாறுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆதார், PAN எனப்படும் நிரந்தரக் கணக்கு எண்களுடன் அனைத்து நிதிப்பரிவர்த்தனைகளும் இணைக்கப்படும் போது, முறைகேடுகளைக் கண்டறியும் பணி எளிதாகி விடுவதாகவும் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

வருமானவரித்துறை, வங்கி என அனைத்துத் துறைகள் தொடர்பான தகவல்களையும் இணைப்பதற்கான மென்பொருள் ஒன்றை உருவாக்கி, அதனைப் பயன்படுத்துவது குறித்த கருத்துரு ஒன்றை ஊழல் கண்காணிப்பு ஆணையம் தயாரித்திருப்பதாகவும்  சவுத்ரி