புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு போராட்டம்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மின்சாரம் மற்றும் குடி நீர் கேட்டு, புயலால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதி கஜா புயலால் பாதிக்கப்பட்டது. ஆனால், புயலுக்குப்பின் பின்11 நாட்கள் ஆகியும் நாகுடி பகுதியில் இதுவரை மின்சாரம், குடிநீர் ஆகியவை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் காலிக்குடங்களுடன் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு : 3-வது நாளாக இன்று ஆய்வு…

புதுச்சேரியில் பாஜக முழுயடைப்பு போராட்டம்..

Recent Posts