கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை, திருச்சியிலிருந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
அப்போது அவர்செய்தியார்களிடம் பேசியது
கஜா புயல் பாதிப்பை வைத்து திமுக அரசியல் செய்கிறது என தவறாக செய்தி பரப்பப்படுகிறது.
புயல் பாதிப்புக்கு உடனடியாக மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். திமுக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் விரைவில் வழங்கப்படும்.
மத்திய அரசிடம் இருந்தாவது நிவாரண நிதியை முறையாக பெற வேண்டும். தமிழக அரசு கேட்ட ரூ.1500 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் .
புயல் பாதிப்பு ஏற்பட்ட உடன் முதல்வர் சென்று நிவாரண பகணிகளை முடக்கிவிட்டிருக்க வேண்டும் 5 நாட்களுக்கு பிறகு ஆய்வுக்கு சென்ற முதல்வர் 5 மணி நேரம் கூட ஆய்வு நடத்தவில்லை.
ஹெலிகாப்டரி்ல சென்று ஆய்வு செய்தது பற்றி முதல்வர் பதில் வேடிக்கையாக உள்ளது. மீனவர்கள், விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை முதல்வர் ஏன் கேட்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்ட பிறகு முதல்வர் டெல்லி சென்றிருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.