முக்கிய செய்திகள்

ஒகி புயல் தாக்கம் இலங்கையில் 7 பேர் உயிரிழப்பு..


இலங்கையில் ஒகி புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் பலத்த காற்று, மழையோடு வீசிய புயல் காற்றில் சிக்கி கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் உயிரிழந்தனர். காணாமல் போன மீனவர்களைத் தேடி கடற்படை விரைந்துள்ளது.
பலவீனமான வீடுகள் சேதமடைந்ததோடு, ஏராளமான மரங்கள் வேரோடு பெயர்ந்து சாலையில் சாய்ந்தன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயமும் இருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
தெற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.