தசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது..
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜோதா பதக்கில் ராவணனின் உருவபொம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இது சவுரா பஸார் பகுதியில் ரயில் பாதையின் அருகே நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் ரயில் பாதையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே பதன்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
ரயில் ஒலி எழுப்பிக் கொண்டே வந்தது. ஆனால் தசரா கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மக்கள் ரயில் வருவதைக் கவனிக்கவில்லை.
இந்நிலையில் அதிவேகமாக வந்த ரயில் பொதுமக்கள் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 50 பேர் பலியாகியிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் ஆபத்தான நிலையில் ஏராளமானோர் இருப்பதால், பலி எண்ணிக்கை 100ஐத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.