இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதமடித்து கோலி அசத்தல்

 

நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இரட்டை சதத்தை விளாசித் தள்ளிய கேப்டன் விராத் கோலி, இந்திய அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றுள்ளார்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது. 3-வது நாளான இன்று இந்தியா முதல் இன்னிங்சில் 610 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியா கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் விளாசினார். இந்தபோட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் அரங்கில் அதிக முறை (5) இரட்டை சதத்தை பதிவு செய்த இந்திய வீரர்கள் பட்டியலில் டிராவிட்டுடன் 2வது இடத்தை கோலி பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் சச்சின், சேவக் 6 முறை இரட்டை சதம் அடித்துள்ளனர். இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 213, புஜாரா 143, முரளி விஜய் 128, ரோகித் சர்மா 102 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்தது. இந்தியாவை விட இலங்கை அணி 384 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சி இருப்பதால் இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

Day 3: Sri Lanka trail by 384 runs with 9 wickets remaining