நாளுக்கு நாள் மிரட்டும் கரோனா… :அச்சத்தில் சென்னை வாசிகள் ..

சென்னையில் 60.67 சதவீதம் ஆண்கள், 39.30 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ராயபுரம் மண்டலத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் பாதிப்பு எண்ணிக்கை 1041 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் ஒரே நாளில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மே 18ம் தேதி உறுதி செய்யப்பட்ட 536 தொற்றுகளில், சென்னையில் 364 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 7,117 பேரில், 1,622 பேர் குணமடைந்துள்ளனர். 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரில் சென்னையில் பாதிக்கப்பட்டோர் 60.5 சதவிகிதம்.

அதேபோல், இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளில் சென்னையில் தான் 69 சதவிகித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.சென்னையில், நேற்று கண்டறியப்பட்ட தொற்றுகளில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 87 பேரும், திரு.வி.க.நகரில் 45 பேரும், தேனாம்பேட்டையில் 40 பேரும், கோடம்பாக்கம் 36 பேரும், அண்ணாநகரில் 32 பேரும், தண்டையார்பேட்டையில் 29 பேரும், அடையாறு 24 பேரும், திருவொற்றியூரில் 14 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மாதவரத்தில் 12 பேரும், வளசரவாக்கத்தில் 10 பேரும், மணலியில் 7 பேரும், சோழிங்கநல்லூரில் 6 பேரும், பெருங்குடியில் 6 பேரும், அம்பத்தூரில் 4 பேரும், ஆலந்தூரில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராயபுரத்தில் ஒரே நாளில் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில், தேனாம்பேட்டையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கோடம்பாக்கம் மண்டலத்தில் 177வது வார்டில் மட்டும் 150க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இந்த பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்த பகுதி வாரியாக திட்டமிடல் பணியை மாநகராட்சி சாபில் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், சோழிங்கநல்லூரில் பாதிப்பு எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

ராயபுரம் – 1272

கோடம்பாக்கம் – 1077

திரு.வி.க.நகர் – 835

தேனாம்பேட்டை – 786

தண்டையார்பேட்டை – 610

அண்ணா நகர் – 586

வளசரவாக்கம் – 532

அடையாறு – 391

அம்பத்தூர் – 321

திருவொற்றியூர் – 161

மாதவரம் – 133

சோழிங்கநல்லூர் – 101

மணலி – 93

பெருங்குடி – 92

ஆலந்தூர் – 84

சென்னையில் 60.67 சதவீதம் ஆண்கள், 39.30 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் மதரீதியான அவதூறு பதிவு :ஐக்கிய அரபில் மேலும் ஒரு இந்தியர் பணிநீக்கம்..

தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..

Recent Posts