மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு ..

மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலை, கடத்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு மலேசியாவில் மரண தண்டனை கட்டாயம். ஆனால் மரண தண்டனை முறைக்கு எதிராக அங்கு போராட்டங்கள் வலுத்துள்ளன.

இதை அடுத்து மத்திய அமைச்சரவை கூடி இதுகுறித்து முடிவெடுத்துள்ளது. அதன் படி, மரண தண்டனை முறையை ஒழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந் சிங் டியோ ((gobind singh deo)) தெரிவித்துள்ளார்.

மரண தண்டனைக்கு முடிவு கட்டப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்கு வரவேற்பு பெருகியுள்ளது