தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பா் 6ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வெளியூா்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊா் செல்ல ஏதுவாக தமிழக அரசு சாா்பில் சிறப்பு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நவம்பர் 3, 4, 5 தேதிகளில் சுமார் 11 ஆயிரத்து 367 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9 ஆயிரத்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம், கே.கே.நகா், பூவிருந்தவல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையத்தை அமைச்சா் விஜயபாஸ்கா் இன்று தொடங்கி வைக்கிறாா். சென்னை கோயம்பேட்டில் சிறப்பு பேருந்துகளுக்கான சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.