முக்கிய செய்திகள்

திரைப்படங்களில் எளிய மக்களுக்கு எதிரான நுண்ணரசியல்: ஊடகவியலாளர் செந்தில் வேல்

 

senthil vel_சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். சலைவத் தொழிலாளி ஒருவர் சலவை செய்த துணிகளை எடுத்துக் கொண்டு விசு அவர்களோடு உரையாடும் காட்சி..அதில் விசு சொல்லுவார்..” நான் 1967 ல் இருந்து பேண்ட் போடுறத விட்டுட்டேன்” என்று…

 

அந்தக் காட்சியில் கொஞ்சமும் தொடர்பே இன்றி வருடத்தைக் குறிப்பிட்டு அவர் சொல்ல வேண்டிய தேவை என்ன என்பதை எத்தனை பேர் உணர்ந்திருப்போம்..அதுவும் 1965 என்றோ 1960 என்றோ சொல்லாமல் 1967 என்று ஏன் சொல்ல வேண்டும்…ஏனெனில் 1967 ல் தான் தமிழகத்தில் திராவிடக் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. திமுக ஆட்சியைப் பிடித்து அண்ணா அவர்கள் முதல்வராகப் பதவியேற்கிறார்…

 

சாதாரணமா சொன்ன வசனத்தை இப்படிப் புரிந்து கொள்ள வேண்டுமா என எண்ணக் கூடும்..அதன் பிறகு வந்த பல்வேறு படங்களும் கூட இவ்வாறான நுண்ணரசியலோடே வந்துள்ளன..அன்றிலிருந்து இன்று வரை, வில்லன் என்றாலே அவர் பெயர் துலுக்கானம், ஆண்டனி, வாசிம்கான், என்றுதான் பயன்படுத்தப்படுகிறது..spyder S.J.Surya_

 

சமீப காலமாக பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில் இயக்குனர் கெளதம் மேனன் அவரது படத்தில் பயன்படுத்திய பெயர்களை நாம் அறிவோம். கொடூர கொலையாளிகளுக்கு அமுதன், இளமாறன் என்று பெயர்களை வைத்திருப்பார்..அந்தப்படத்தின் கதாநாயகன் பெயர் ராகவன். இந்தப் பெயர்களைத் தாங்கியிருக்கும் சமூகங்கள்தான் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தற்காலிகமாக நிகழ்வது என்று எவ்வாறு நம்ப இயலும்.

 

இதன் நீட்சியாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் “ஸ்பைடர் ” திரைப்படத்தில் கொடூரக் கொலைகளைச் செய்யும் வில்லனின் பெயர் சுடலை. அவர் சுடுகாட்டில் பிறந்ததாகக் காட்டியிருப்பார் இயக்குனர் முருகதாஸ். சுடலை என்றாலே சுடுகாட்டில் வாழ்பவன் என்றுதான் பொருள்..தேவாரப் பாடல் கூட, ” காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர்கள்வன் ” என்று கூறுகிறது.அவ்வாறு காடுடைய சுடலையை தென் மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் காவல் தெய்வமாக நினைத்து வழிபட்டு வருவதும் அறிந்த ஒன்றே..

 

இது போன்ற பெயர்களை கதாபாத்திரங்களுக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் முருகதாஸ் போன்றவர்கள் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள். தமிழ்ச் சமூகத்திற்கு ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்திய இயக்குனர் முருகதாஸ் தற்போது ஸ்பைடரில் சுடலை என்ற பெயரை இவ்வாறு பயன்படுத்தியுள்ளார்…

 

தர்மதுரை என்ற படத்தில் நல்ல மருத்துவர்களை உருவாக்கும் பேராசிரியருக்கு காமராஜ் என்று பெயரிட்டிருப்பார் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள்..

 

ரஜினிகாந்தும், ஜனகராஜும் ஒரு படத்தில் நடித்திருப்பர். அதில், ஜனகராஜின் பெயர் கபாலி. அதை மாற்றி கே.பாலி என்று அவர் வைத்துக் கொள்வார். நகைச்சுவை நடிகரின் பெயரே கபாலி என்று இருப்பதை மாற்றிக் கொண்டதாகக் காட்டிய அதே தமிழ் சினிமாவில், கதாநாயகன் அதுவும் ரஜினிக்கு கபாலி என்று பெயர் வைத்த ரஞ்சித் போன்றவர்கள் ஒரு பக்கம் இருக்க, இயக்குனர் முருகதாஸ் போன்றவர்கள் அடுத்து வரும் படங்களிலாவது இது போன்ற நுண்ணரசியலைத் தவிர்ப்பது நல்லது.

 

Deepest politics in Tmail Cinemas against to the Marginal Society : Senthil Vel

 

முகநூல் பதிவில் இருந்து நன்றியுடன்….

____________________________________________________________________________