முக்கிய செய்திகள்

டெல்லியில் அமித் ஷா தலைமையில் பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்…

டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

மேலும் பாஜக உட்கட்சி தேர்தலும் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம், டெல்லியில் அக்கட்சித் தலைமையகத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதில் பாஜக அமைப்புத் தேர்தல், புதிய தலைவர் தேர்வு, கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 18ஆம் தேதி பாஜக பொதுச்செயலாளர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.