டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாகனம் மீது தாக்குதல்..

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கெஜ்ரிவால் சென்ற வாகனம் நரிலா பகுதியை வந்தடைந்தபோது

சுமார் 100 பேர் கொண்ட கும்பல் அவரது வாகனத்தை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

கைகளில் குச்சிகளை வைத்து வாகனத்தின் ஜன்னல் கதவுகளை தாக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.