முக்கிய செய்திகள்

டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கியது..


டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில்
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உடல்நலக்குறைவு காரணமாக, ராகுல் காந்திக்கு கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என்று சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். இன்று நடைபெறும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இதற்கான முடிவு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுலுக்கு போட்டியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத பட்சத்தில் டிசம்பர் முதல் வாரத்திலேயே ராகுல்காந்தி தலைவராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குஜராத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 9ம்தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்குமுன்பாகவே ராகுல் பொறுப்பேற்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.