முக்கிய செய்திகள்

டெல்லியில் ராகுல் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்..


டெல்லியில் காங்கிரஸ், தலைவர் ராகுல் காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளார்.

காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமியை போலீஸ் உட்பட 8 பேர் வன்கொடுமை செய்த கொலை செய்தனர். இதே போல் உ.பி., மாநிலம் உனா பகுதியிலும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவங்களை கண்டித்து காங்., தலைவர் ராகுல் நள்ளிரவில் போராட்டம் நடத்த உள்ளார். டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் நள்ளிரவில் ராகுல் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பிரதமர் மோடி தலைமையில் பாஜக, சார்பில் இன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.