முக்கிய செய்திகள்

டெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்.

On the day, Justice Muralidhar of Delhi HC and Ha grilled Centre & Delhi Police over violence in NCR and inaction against BJP leaders for their communal/hate speeches, Govt issues notification effecting his transfer to Punjabryana HC.

கடந்த 4 நாட்களாக டெல்லியில் சிஏஏ எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்தி 24 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த கலவரம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி.முரளிதர் விசாரித்தார். அப்போது அவர் மத்திய அரசை நோக்கி கேள்வி கேட்டார்,

மேலும் கலவரத்தை துாண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக குற்றம்சாட்டினார். அவர்கள் மீது வழக்கு பதிய உத்தரவிட்டார்.

இந்நிலையில் நடு இரவில் நீதிபதி.முரளிதர் டெல்லியில் இருந்து பஞ்சாப் உயர்நீதிமன்றத்திற்க்கு மாற்றப்பட்டார்