ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ஜூன் 5 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஜூன் 5 ம்  தேதி வரை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் சார்பில் கபில் சிபல் ஆஜராக உள்ளார். இந்த மனுமீதான விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு ஒத்திவைத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்யத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஜூன் 5 ஆம் தேதி அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Delhi’s Patiala House Court also gave protection from arrest to P Chidambaram till the next date of hearing