டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை..

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக தொடர்மழை பெய்தது.

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் நகர்ப்பகுதி, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், அணைக்கரை, சுவாமிமலை பட்டீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே மழை பெய்தது.

இதனால், பள்ளி மாணவர்கள் நனைந்தபடி பள்ளிகளுக்கு சென்றனர். மழை காரணமாக மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், வடிநீர் கால்வாய்கள் தூர்வாராததால், தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்படும் என புகார் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, மணல்மேடு, வேதாரண்யம், கோடியக்கரை, தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, ஆலங்காடு.நன்னிலம், குடவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மீ., மழை பதிவானது.

கடலூர் ,விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

அரசுப் பள்ளிகளில் வருகைப் பதிவிற்கு பயோமெட்ரிக் கருவி : தமிழக அரசு

சர்க்கார் பட விவகாரம் : மதுரை திரையரங்கம் முன் அதிமுகவினர் போராட்டம்..

Recent Posts