முக்கிய செய்திகள்

ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி…


ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்பதால் அதை நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினருடன் பிரதமர் மோடி, நமோ ஆப் மூலம் கலந்துரையாடியுள்ளார். பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாதவர்கள் தான் வன்முறை அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.