முக்கிய செய்திகள்

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து கருப்பு உடையில் கருணாநிதி …


கடந்த ஆண்டு நவம்பர்-8ந் தேதி பிரதமர் மோடி அறிவித்த ரூ.1000,ரூ.500 பணமிழப்பு நடவடிக்கை ஓர் ஆண்டு முடிவடைந்ததை எதிர் கட்சிகள் கருப்பு தினமாக அறிவித்தன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக கருப்பு உடையில் திமுக தலைவர் கருணாநிதி உட்பட தி.மு.க.வினர் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். கருணாநிதியுடன் பொதுச் செயலாளர் க. அன்பழகன்,செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகளும் கருப்பு உடையணிந்தனர்.