முக்கிய செய்திகள்

டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் உள்ளாட்சி துறையில் ரூ6000 கோடி ஊழல் …

டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் தமிழக உள்ளாட்சி துறை கடந்த 5 வருடங்களில் மாதம் 100 என ரூ6000 கோடி மெகா ஊழல் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாயியுள்ளன.

பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் டெங்கு பயம் தொற்றிக் கொண்டது.

பருவமழை தொடங்கிய பின் பயந்தது மாதிரியே நுாற்றுக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

2017-லில் டெங்கு காய்சலுக்கு அதிக உயிர்களை அதாவது 4500 பேரை பலிகொடுத்த மாநிலம் தமிழகம்.

தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டோரை புது அடைமொழியில் மர்மக்காய்ச்சல் என சுகாதாரத்துறை மக்களை ஏமாற்றி வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை ஏதும் எடுக்காமல் இருந்துவிட்டு தற்போது வீடுவீடாக சென்று அபராதம் விதிக்கின்றனர்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் உள்ளாட்சி துறையில் ரூ.6000 கோடி மெகா ஊழல் நடந்துள்ளதாக ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

டெங்கு கொசுக்களை ஒழிக்க கொசுமருந்து மற்றும் உபகரங்கள் வாங்கியதில் மாதம் 100 கோடி என கடந்த 5 ஆண்டுகளில் ரூ6000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.