சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர காவல் துறை ஒரே வாரத்தில் மூன்று வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து 36 சவரன் தங்க நகைகள் மீட்டுள்ளது.
இபி ரோட்டில் கடந்த ஆண்டு பட்டப்பகலில் இபி ரோட்டில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் சுமார் ஆறு பவுன் ஆறு பவுன் தங்க செயினையும் புவனேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் சுமார் 7 பவுன் தங்கச் தாலி செயினையும் பைக்கில் வந்த இரண்டு நபர்கள் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
அதேபோல் கடந்த ஆண்டு இறுதியில் ஆவரங்காடு பகுதி விபி நகரில் மகாலிங்கம் என்பவரின் வீட்டினை பட்டப்பகலில் கதவினை உடைத்து அதன் உள்ளே இருந்த சுமார் 23 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர்.
இது குறித்து தேவகோட்டை நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து வந்தனர்.
இவ் வழக்கில் குற்றவாளிகளை கண்டறிந்து வழக்கு சொத்துக்களை கைப்பற்ற சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செல்வராஜ் அவர்கள் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் மேற்பார்வையில் தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் உதவி ஆய்வாளர் அன்சாரி சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் போலீசாரின் ரகசிய விசாரணையில் மேற்படி சம்பவங்களில் ஈடுபட்டது விருதுநகர் மாவட்டம் ஆவுடையார் கோயில் ஹரிஹரன் என்பதும் குடவாசல் பத்தூர் பணம் கரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர் இருவரையும் பிடிப்பதற்காக போலீசார் முயற்சி செய்த போது கண்ணன்கோட்டை இரட்டை கொலை கொள்ளை வழக்கு நிகழ்ந்ததால் மேற்படி எதிரிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது மேற்படி அடிப்படையினர் எதிரிகளை கைது செய்துவிசாரித்து போது மேற்படி சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர் அவர்களிடம் இருந்து மேற்படி மூன்று வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட சுமார் 36 பவுன் தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவங்களில் தங்க நகைகளை திருடி சென்ற மேற்படி எதிரிகள் இருவரும் நகையாக கடைகளில் விற்றால் மாட்டிக் கொள்வோம் என பயந்து இருவரும் பங்கு பிரித்து அதை தங்க கட்டிகளாக உருக்கி மறைத்து வைத்திருந்ததை போலீசாரிடம் எடுத்துக் கொடுத்தனர்.
மேற்படி வழக்கு சொத்துக்களை கைப்பற்றிய பின்னர் மேற்கண்ட இருவரையும் தனித்தனியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்