தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் விடுதலை..

தருமபுரி பேருந்து எரிப்ப வழக்கில் சிறையிலிருந்த நெடுஞ்செழியன்,மாது,முனியப்பன் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக ஆளுநரின் ஒப்புதலால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி-2ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்த சிறைத் தண்டனையால்  நடந்த போராட்டத்தின் போது கோவை வேளான் பல்கலைக் கழக மாணவிகள் 3 பேர் பேருந்தில் வைத்து எரித்தக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் கைதான நெடுஞ்செழியன்,மாது,முனியப்பன் மூன்று பேருக்கும் துாக்க தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தற்போது விடுதலை செய்யப்பட்டனர்.