‘நான் ஏன் பாவியான தினகரனை ஆதரித்தேன்’: ராமாயணம் மூலம் சுப்பிரமணிய சாமி விளக்கம்..


ஆர்.கே நகரில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனை ஆதரித்தது ஏன்? என்பதை ராமாயண கதையை சுட்டிக்காட்டி சுப்பிரமணிய சாமி விளக்கமளித்துள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து பதிவிட்டு வந்தார். தன் கட்சி வேட்பாளர் தேர்தல் களத்தில் இருந்தாலும், தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

தினகரன் வெற்றி பெற்றதும், முதல்வர் அணியும், தினகரன் அணியும் இணைந்து 2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ட்வீட்டினார். ஏன் தினகரனுக்கு ஆதரவு? என்று பலர் கேள்வி எழுப்பியது குறித்து பதிலளிக்காமல் இருந்து வந்த அவர் இன்று காலை அந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

“ஆர்.கே நகர் வேட்பாளர்களில் பலர், நான் ஏன் பிறரைவிட ‘பாவியான’ டி.டி.வி.க்கு முன்னுரிமை அளிக்கிறேன் என கேட்கின்றனர். கடவுளான ராமர் ஏன் வாலியை விட சுக்ரீவனுக்கு முன்னுரிமை அளித்தார் என படியுங்கள் என்று கூறினேன்” என அவர் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்ட போது, சுப்பிரமணிய சாமி ஆதரித்தார் என்பது நினைவு கூறத்தக்கது.