முக்கிய செய்திகள்

மாவட்ட தலைநகரங்களில் பிப்.13தேதி கண்டன கூட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு..


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.

பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தின.

திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர்,வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் பிப்.13தேதி கண்டன கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.