மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நியமன நேர்காணல் மே 25ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கும் என கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு மண்டலங்களுக்கான நிர்வாகிகள் நியமன நேர்காணல் நடைபெறவுள்ளது, மே25, 26 தேதிகளில் தெற்கு, வடக்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் நியமன நேர்காணல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
