தீபாவளிக்கு சென்னையிலிருந்து 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் ..

 தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 22 ஆயிரம் சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.

நவம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் 12 ஆயிரம் பேருந்துகளும், பண்டிகை முடிந்த பின்னர் மீதம் உள்ள பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணா நகர், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பாபர் மசூதி வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம் அதிரடி..

‘திருமுருகன் காந்திக்கு இழைக்கப்படும் கொடுமை;சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை தேவை’ : வேல்முருகன் வலியுறுத்தல்..

Recent Posts