
தீபாவளிப் பண்டிகை வரும் அக்.,31 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அக்டோபர் 28,29,30 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னனையிலிருந்து சுமார் 11,176 பேருந்துகளும்,பிற ஊர்களிலிருந்து 2,910 பேருந்துகள் என மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக 9,441 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.